ஒரே வாரத்தில் 2 படங்கள் ரிலீஸ்: தமிழ் சினிமாவில் கயாடு லோஹரின் புதிய மைல்கல்!

ஒரே வாரத்தில் 2 படங்கள் ரிலீஸ்: தமிழ் சினிமாவில் கயாடு லோஹரின் புதிய மைல்கல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, வளர்ந்து வரும் இளம் நடிகையான கயாடு லோஹர் ஒரே வாரத்தில் தனது இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, வளர்ந்து வரும் இளம் நடிகையான கயாடு லோஹர் ஒரே வாரத்தில் தனது இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற
‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த நடிகை கயாடு லோஹர், அவர் தற்போது .துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ள ‘ஐ’ம் கேம்’ திரைப்படம் செப்டம்பர் 3-ம் தேதியும், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதியும் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
துல்கர் சல்மான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் என தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் இணைந்து நடித்துள்ள திரைப்படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே வார இடைவெளியில் இரு வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் நாயகியாக கயாடு லோஹர் தோன்ற இருப்பது, அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமன்றி, இம்மாத இறுதியில் நானியுடன் இணைந்து நடித்த 'தி பாரடைஸ்' திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில், கயாடு லோஹருக்குத் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்படத்திற்கு மலேசியாவில் வெளியீட்டுத் தடை!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு மலேசியாவில் திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சில முட்டாள்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள்!" – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!
தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, "சில முட்டாள்களுக்கு பதில் சொல்லி பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்" எனத் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ராமாயணா’ படத்தின் பிரம்மாண்ட ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல்: தமிழ் பதிப்பு வெளியீடு!
இந்திய திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் ‘ஜெய் ஜெய் ராம்’ என்ற முதல் பாடலின் தமிழ் பதிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜெயிலர் 2: ரசிகர்களைக் குஷிப்படுத்திய இரண்டாவது பாடல் வெளியீடு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




