செப்டம்பரில் 1 லட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!
நடப்பு செப்டம்பர் மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 107,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மொத்தம் 30 செய்திகள் கண்டறியப்பட்டன.
நடப்பு செப்டம்பர் மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 107,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பணக்காரர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களைக் கவரும் வகையில், சீன தனியார் நிறுவனம் ஒன்று 760,000 அமெரிக்க டாலர் (சுமார் இந்திய மதிப்பில் 6.3 கோடி ரூபாய் / இலங்கை மதிப்பில் 23 கோடி ரூபாய்க்கும் மேல்) கட்டணத்தில் வணிகரீதியான விண்வெளிச் சுற்றுலா (Suborbital Space Tourism) பேக்கேஜை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்நாட்டு Wine விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அங்குள்ள ஒயின் தயாரிப்பாளர்கள் தங்களது பாரம்பரியத் தொழிலைக் காப்பாற்றப் புதுமையான வணிக உத்தியைக் கையிலெடுத்துள்ளனர்.
பூலோகச் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் இந்தப் பருவத்தின் முதல் பனிப்பொழிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
வாட் மாகாணத்தில் உள்ள Glacier 3000 மலைச் சுற்றுலாத் தலம், இந்த நிதியாண்டு நிறைவடைவதற்கு முன்பே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பார்வையாளர்களைப் பதிவு செய்துள்ளது.
கடந்த வாரம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 5 டச்சு (நெதர்லாந்து) சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழக்கக் காரணமான கோர பேருந்து விபத்து தொடர்பாக, பேருந்து ஓட்டுநருக்கு எதிராக சுவிஸ் அரசு வழக்கறிஞர்கள் இன்று (செப்டம்பர் 14) உத்தியோகபூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3-வது நாளாக பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று (செப்டம்பர் 14) தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நடப்பு ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பாரம்பரியமிக்கAlpabzug எனப்படும் மாட்டு ஊர்வல விழாக்கள் மீண்டும் மிகக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வரிக் கொள்கைகள் காரணமாக, சுவிட்சர்லாந்திலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்திற்குப் ஆன்மீகக் குழுவினர் வருகை தந்தபோது, பெண் ஊழியர்களைப் பணிச் செய்ய விடாமல் ஒதுக்கி வைக்குமாறு கூறப்பட்டதாகக் குற்றம்சாட்டி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை நிறுத்தப்பட்டு ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இமயமலையில் ஏற்பட்ட பனிப் பாறை சரிவைத் தொடர்ந்து பொங்கி வழிந்த போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிகளின் வெள்ளப்பெருக்கில் சிக்கி 589 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5,000 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான நேரடி பயணிகள் விமான சேவைகள் அதிவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து மற்றும் வர்த்தக உறவுகள் புதிய பரிமாணத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான Crans-Montana புத்தாண்டு இரவன்று ஏற்பட்ட கோர தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் தன்னார்வ அறக்கட்டளை, தங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கம் காரணமாக, சுவிட்சர்லாந்தின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான Rhône Glacier பனிக்குகை உருகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால், அதனை உடனடியாக மூடுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Crans-Montana சுற்றுலாத் தளத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த நோயாளிகளுக்கு, Suva சிறப்பு மருத்துவமனைகளில் மறுவாழ்வு சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அரிசோனாவில் உள்ள கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 15-க்கும் மேற்பட்டோரைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைக் கடந்துள்ளது.
நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தகவலின்படி, மீட்புக் குழுவினர் இதுவரை 762 சடலங்களை மீட்டுள்ளனர். மேலும், 2,700-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.
இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நுவரெலியா ஹக்கல தாவரவியல் பூங்காவை நவீனமயமாக்கி, சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Nepal-ல் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போன 1,300-க்கும் மேற்பட்டவர்களில், Switzerland நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் Rasuwaபகுதியில் பாயும் BhoteKoshiஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றான யால தேசிய வனவிலங்கு பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வளாகங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான நுவரெலியா கிரகரி வாவியின் நீரை நேரடியாக அருந்த வேண்டாம் என்றும், அவ்வாறு அருந்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் பாலி தீவில், இந்துக்களின் புனித நாளான 'ஞேபி' (Nyepi) எனப்படும் மௌன விரத தினத்தை அவமதித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து டென்பசார் (Denpasar) மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் புதன்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.