சுவிஸ் அரசின் Beyond Gravity விண்வெளி நிறுவனத்தின் மீது திட்டமிட்ட சைபர் தாக்குதல்

சுவிஸ் அரசின் Beyond Gravity விண்வெளி நிறுவனத்தின் மீது திட்டமிட்ட சைபர் தாக்குதல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுவிட்சர்லாந்து அரசுக்குச் சொந்தமானதும், சர்வதேச விண்வெளித் துறைக்கு அதிநவீன உபகரணங்களை விநியோகம் செய்வதுமான Beyond Gravity நிறுவனத்தின் மீது திட்டமிடப்பட்ட பாரிய (Cyber Attack நடத்தப்பட்டுள்ளது.
விண்வெளி ஓடங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கான முக்கியப் பாகங்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை இலக்கு வைத்து இந்த ஹேக்கிங் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து, நிறுவனத்தின் முக்கியச் சேவையகங்கள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டுத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகச் சுவிஸ் பாதுகாப்புப் படையினர் மற்றும் நிறுவன நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளன.
NASA மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) போன்ற முன்னணி விண்வெளி நிறுவனங்களுக்கு உபகரணங்களை வழங்கி வரும் 'பியாண்ட் கிராவிட்டி' மீதான இந்தச் சைபர் தாக்குதல், சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சுவிட்சர்லாந்து வான் பாதுகாப்பு ஒப்பந்தப் போட்டி: பேர்ன் நகரில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் முகாமிட்டு ஆலோசனை
சுவிட்சர்லாந்தின் புதிய வான் பாதுகாப்பு அமைப்பைக் கைப்பற்றுவதற்கான கோடிக்கணக்கான சுவிஸ் ஃபிராங்க் மதிப்புள்ள ஒப்பந்தப் போட்டியில், பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் Catherine Vautrin , Bern நகருக்கு வருகை தந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
37 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்குப் பிறகு A1 நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு
சுவிட்சர்லாந்தின் முக்கிய நெடுஞ்சாலையான A1 நெடுஞ்சாலையில், 37 வாகனங்கள் மோதிக்கொண்ட பெரும் விபத்துக்குப் பிறகு, அந்தச் சாலை மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
சூரிச் பள்ளிகள் அருகே 'Tempo 20' வேகக் கட்டுப்பாடு: விவாதத்தில் வெடித்த எதிர்ப்பு!
சூரிச் நகரத்தில் உள்ள பள்ளிக்கூடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாட்டை (Tempo 20) நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு, நகர சபையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.


