சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் AI வழிகாட்டுதலை நம்பும் நடைபயணிகளுக்கு எச்சரிக்கை

அக்கினி•22 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் AI வழிகாட்டுதலை நம்பும் நடைபயணிகளுக்கு எச்சரிக்கை

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் AI வழிகாட்டுதலை நம்பும் நடைபயணிகளுக்கு எச்சரிக்கை குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தின் மலை வழிகாட்டிகள், ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடைபயணங்களைத் திட்டமிட ChatGPT உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தும் பயணிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோடைக்காலத்தில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பாதையைப் பின்பற்றிய இரண்டு பெண்கள் பைரனீஸ் மலைப்பகுதியில் வழிதவறியுள்ளனர். மேலும், 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிக்கியிருந்த சில நடைபயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

AI கருவிகள் பொதுவான தகவல்களை வழங்குவதுடன், வானிலை, பருவநிலை மற்றும் பனிப்பாறைகளின் தற்போதைய நிலை போன்ற முக்கியமான அம்சங்களைப் பெரும்பாலும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என மலை வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, சாமோனிக்ஸ் முதல் செர்மாட் வரையிலான மலைப்பாதை, குளிர்காலத்திலும் கோடைக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது. வெவ்வேறு பருவங்களில் வெவ்வேறு மலைக் கணவாய்கள் மற்றும் தங்குமிடங்கள் பயன்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.

சுவிஸ் மலை வழிகாட்டிகள் சங்கத்தைச் சேர்ந்த பியர் மாதேய், இணையத்தில் மலைப்பயணங்கள் எளிதானதாகத் தோன்றலாம். ஆனால் இயற்கைச் சூழல் முற்றிலும் வேறுபட்டது என எச்சரித்துள்ளார்.

எனவே, மலைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு தகுதி பெற்ற உள்ளூர் மலை வழிகாட்டிகளின் ஆலோசனையைப் பெறுமாறு அவர் நடைபயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்கினி

அக்கினி

ஆசிரியர் குழு

அக்கினி செய்திகள் ஆசிரியர் குழு

தொடர்புடைய செய்திகள் (Related News)

எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!

சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!

சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!

சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm