ஆசிய விளையாட்டு விழா 2026: ஆடவர் T20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு விழா 2026: ஆடவர் T20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவர் ரி20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை (22) மாலை வெளியிட்டது.
சில வாரங்களுக்கு முன்னர் தேசிய ஒலிம்பிக் குழு வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுஷான் நீக்கப்பட்டு கருக்க சன்கேத் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏனைய வீரர்களில் மாற்றம் எதுவும் இல்லை.
அணித் தலைவராக சஹான் ஆராச்சிகே நியமிக்கப்பட்டுள்ளார்.பயண வழிகாட்டிகளைப் படி
இலங்கை அணி எதிர்வரும் 24ஆம் திகதி ஜப்பான் நோக்கி பயணமாகவுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் ஹங்ஸூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவிலும் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக சஹான் ஆராச்சிகே விளையாடி இருந்தார்.
2023இல் கால் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் இலங்கை தோல்வி அடைந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!
பிரீமியர் லீக்கின் நிதி விதிகளை மீறியதாகக் கூறப்படும் 115 குற்றச்சாட்டுகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும் மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதாக ‘தி அத்லெடிக்’ வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.
ஆசிய விளையாட்டு போட்டி: போல் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பரனிகா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான போல் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பரனிகா வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கை அணியின் அதிரடி வெற்றி: 2வது ஒருநாள் போட்டியை கைப்பற்றி அசத்தல்!
எதிரணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார திறமையை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி, தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.
முதுகுப்புறத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க!
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தில் இலங்கை அணியில் இடம்பெற்ற சுழல்பந்துவீச்சாளர் வனிந்த ஹசரங்க, உபாதைக்குள்ளானதால் நாடு திரும்புவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வியாழக்கிழமை (24) மாலை அறிவித்தது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




