சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

Black Friday சலுகைகளால் இரு தரப்புக்கும் இழப்பு : சுவிட்சர்லாந்து ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

VIGNESWARAN ABIRAMY•14 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு3
பகிர்க:WhatsAppFacebook
Black Friday சலுகைகளால் இரு தரப்புக்கும் இழப்பு : சுவிட்சர்லாந்து ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Black Friday சலுகைகளால் இரு தரப்புக்கும் இழப்பு : சுவிட்சர்லாந்து ஆய்வில் அதிர்ச்சித் தகவல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அமெரிக்காவில் தொடங்கப்பட்டு உலகளவில் பரவிய Black Friday தள்ளுபடி விற்பனையானது, தற்போது சில்லறை வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் எந்தவொரு பயனும் தராத ஒரு Lose-Lose சூழலாக மாறியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற காட்லீப் தட்வீலர் நிறுவனம் (Gottlieb Duttweiler Institute - GDI) நடத்திய ஆய்வில், இந்த அதிரடித் தள்ளுபடி விற்பனை முறை தனது சிறப்பையும் மதிப்பையும் இழந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர நவம்பர் மாதம் முழுவதையும் 'பிளாக் வீக்' அல்லது 'பிளாக் மந்த்' எனக் கூறி தள்ளுபடிகளை நீட்டிப்பதால், சில்லறை விற்பனையாளர்களுக்கு லாப வரம்பு பெருமளவில் குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது.

அதேவேளையில், வாழ்க்கைத் செலவினங்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தள்ளுபடிகள் ஏமாற்றமளிப்பதாக நுகர்வோரும் கருதுகின்றனர்.  

வாடிக்கையாளர்கள் ஏற்கனவே வாங்க நினைத்த பொருட்களையே இந்த தள்ளுபடி நாட்களில் வாங்குவதால், சில்லறை வர்த்தகத் துறைக்கு புதிய வருவாய் கிடைப்பதற்குப் பதிலாக கணிசமான மதிப்பு இழப்பே ஏற்படுவதாக அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!

சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!

சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!

சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm