சுவிட்சர்லாந்தில் கொடூர ரான்சம்வேர் தாக்குதல்: உக்ரைன் ஐடி நிபுணருக்கு 12 ஆண்டுகள் சிறை!

சுவிட்சர்லாந்தில் கொடூர ரான்சம்வேர் தாக்குதல்: உக்ரைன் ஐடி நிபுணருக்கு 12 ஆண்டுகள் சிறை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுவிட்சர்லாந்தின் முன்னணி நிறுவனங்கள் மீது கொடூரமான ரான்சம்வேர் (Ransomware) கணினித் தாக்குதல்களை நடத்தி மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற உக்ரைனைச் சேர்ந்த 52 வயது தகவல் தொழில்நுட்ப நிபுணருக்கு சூரிச் நீதிமன்றம் 12 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் முன்னணி நிறுவனங்கள் மீது கொடூரமான ரான்சம்வேர் (Ransomware) கணினித் தாக்குதல்களை நடத்தி மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற உக்ரைனைச் சேர்ந்த 52 வயது தகவல் தொழில்நுட்ப நிபுணருக்கு சூரிச் நீதிமன்றம் 12 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ரயில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டாட்லர் ரயில் (Stadler Rail) உட்பட பல முன்னணி சர்வதேச நிறுவனங்களின் கணினி அமைப்புகளை முடக்கி, சுமார் 100 மில்லியன் சுவிஸ் பிராங் வரை இழப்பை ஏற்படுத்திய வழக்கில் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட உக்ரைனிய நிபுணர், 'லாக்கர்கோகா' (Lockergoga) மற்றும் 'மெகாகோர்டெக்ஸ்' (Megacortex) போன்ற மிகவும் ஆபத்தான ரான்சம்வேர் மென்பொருள்களை உருவாக்கிய முதன்மை நிரலாளர் (Developer) என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தான் வெறும் தொழில்நுட்ப ஆலோசகராக மட்டுமே செயல்பட்டதாக குற்றவாளி வாதிட்டபோதிலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தரவுகளில் மிரட்டல் கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டதால் நீதிமன்றம் அவரது வாதத்தை நிராகரித்திரத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சுவிட்சர்லாந்தில் இன்று தீர்மானமிக்க வாக்கெடுப்பு: தாவர அடிப்படையிலான உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மக்கள் தீர்ப்பு!
சுவிட்சர்லாந்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வரும் முக்கிய வாக்கெடுப்பில், நாட்டின் Food Initiative மற்றும் நிலையான விவசாயம் குறித்த திட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷெங்கன் தகவல் அமைப்பில் புதிய எச்சரிக்கைகள் அக்டோபர் 1 முதல்
சுவிட்சர்லாந்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல், ஷெங்கன் தகவல் அமைப்பில் புதிய வகையான தேடல் மற்றும் தகவல் எச்சரிக்கைகளை அதிகாரிகள் பயன்படுத்த முடியும்.
சுவிஸ்: இயற்கை பால் விலை அக்டோபர் முதல் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கான உற்பத்தியாளர் விலை, அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரு கிலோகிராமுக்கு 3 சென்டிம்கள் அதிகரிக்கிறது.
சுவிட்சர்லாந்து – கொசோவோ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
சுவிட்சர்லாந்தை உள்ளடக்கிய EFTA நாடுகளுக்கும் கொசோவோ குடியரசுக்கும் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




