சுவிஸ்: 21°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சினிமா

"இரத்தம் வேண்டாம்... லவ் பண்ணுங்க!" - மனம்திறந்த அர்ஜுன் தாஸ்!

செந்தில் குமார்•28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
"இரத்தம் வேண்டாம்... லவ் பண்ணுங்க!"  - மனம்திறந்த அர்ஜுன் தாஸ்!

"இரத்தம் வேண்டாம்... லவ் பண்ணுங்க!" - மனம்திறந்த அர்ஜுன் தாஸ்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

'கைதி', 'மாஸ்டர்' போன்ற திரைப்படங்களில் தனது வித்தியாசமான குரலாலும், மிரட்டலான வில்லன் நடிப்பாலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.கதாநாயகனாக உருவெடுத்துள்ள இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது நடிப்புப் பயணம் குறித்தும் வில்லன் கதாபாத்திரங்கள் குறித்தும் சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

'கைதி', 'மாஸ்டர்' போன்ற திரைப்படங்களில் தனது வித்தியாசமான குரலாலும், மிரட்டலான வில்லன் நடிப்பாலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.கதாநாயகனாக உருவெடுத்துள்ள இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது நடிப்புப் பயணம் குறித்தும் வில்லன் கதாபாத்திரங்கள் குறித்தும் சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். 


"ஆரம்பத்தில் என்னை வில்லன் மற்றும் 'டார்க்' கதாபாத்திரங்களிலேயே பார்த்த ரசிகர்கள், இப்போது கதாநாயகனாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், உண்மை என்னவென்றால் இப்போதெல்லாம் என்னை வில்லன் வேடத்தில் நடிக்கச் சொல்லி யாரும் அணுகுவதே இல்லை" என்று சிரித்தபடி கூறியுள்ளார்.  


திரையரங்கிற்குச் செல்லும்போது, "தயவுசெய்து இரத்தம், வன்முறை இல்லாத குடும்பக் கதைகளில் அமையுங்கள்" என்று பெண் ரசிகை ஒருவர் கேட்டுக்கொண்டதாகவும், அதனாலேயே தான் ரொமாண்டிக் மற்றும் குடும்பப் படங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 "என்றாலும், எனக்கு வில்லனாக நடிப்பது மிகவும் பிடிக்கும். வலுவான, அழுத்தமான கதையமைப்பில் வில்லன் கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப் மீண்டும் வில்லனாக நடிப்பேன்" என்றும் தெரிவித்துள்ளார். திரைப்பட நகர்வுகள்: தற்போது 'வான்ஸ் மோர்' உள்ளிட்ட காதல் மற்றும் குடும்பப் பின்னணி கொண்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்து வரும் அர்ஜுன் தாஸ், தனக்கான வரம்புகளை உடைத்து அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் ஜொலிக்கத் தயாராகி வருகிறார்.


கொடூரமான வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது சாஃப்ட் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#சினிமா
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்படத்திற்கு மலேசியாவில் வெளியீட்டுத் தடை!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு மலேசியாவில் திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சில முட்டாள்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள்!" – ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

தனக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, "சில முட்டாள்களுக்கு பதில் சொல்லி பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்" எனத் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

‘ராமாயணா’ படத்தின் பிரம்மாண்ட ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல்: தமிழ் பதிப்பு வெளியீடு!

இந்திய திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் ‘ஜெய் ஜெய் ராம்’ என்ற முதல் பாடலின் தமிழ் பதிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஜெயிலர் 2: ரசிகர்களைக் குஷிப்படுத்திய இரண்டாவது பாடல் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm