
நிதி முறைகேடு விசாரணை: WHO பதவியில் இருந்து சைமா வாஜெட் விலகல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய பணிப்பாளரும், பதவியிழந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளுமான சைமா வாஜெட், தன் மீதான நிதி முறைகேடு மற்றும் மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் பங்களாதேஷ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் புதன்கிழமை (09) தனது பதவி விலகல் கடிதத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸிடம் சமர்ப்பித்துள்ளார். 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகால பதவிக் காலத்திற்காகத் தெரிவுசெய்யப்பட்ட சைமா வாஜெட் மீது, பங்களாதேஷ் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோசடி மற்றும் ஆவண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
13-வது ஓய்வூதியத்துக்கு நிதி திரட்ட VAT வரி உயர்வு – நவம்பர் 29-ல் வாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தில் 13-வது அரசு ஓய்வூதியத்துக்கு நிதி திரட்டுவதற்காக மதிப்பு கூட்டு வரியான VAT-ஐ உயர்த்துவது குறித்து நவம்பர் 29-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சுவிஸ் சொத்து மதிப்பீட்டில் 1.8 லட்சம் பிராங்குகள் வரை வேறுபாடு
சுவிட்சர்லாந்தில் ஒரே சொத்தை இரண்டு வெவ்வேறு தரகர்கள் மதிப்பிடும்போது, மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் பிராங்குகள் வரை வேறுபாடு ஏற்படலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகளவில் அதிகரிக்கும் கடன் செலவுகள் – சுவிட்சர்லாந்திலும் தாக்கம்
உலகளவில் கடன் பெறுவதற்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் சுவிட்சர்லாந்திலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் – புதிய நடவடிக்கைகள்
சுவிஸ் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதைத் தடுக்க புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




