ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் 2027க்கான வரவேற்பு நாடு இந்தியா என ஐசிசி அறிவிப்பு!

ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் 2027க்கான வரவேற்பு நாடு இந்தியா என ஐசிசி அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 2027 பெப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவின் மும்பை மற்றும் வடோதரா நகரங்களில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்தது.
அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் 2027 பெப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவின் மும்பை மற்றும் வடோதரா நகரங்களில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்தது.
உலகின் ஆறு முன்னணி மகளிர் கிரிக்கெட் அணிகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை ஆகியவை பங்கேற்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடர், மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஒவ் இண்டியா (CCI) மற்றும் வடோதரா சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகியவற்றில் அரங்கேற்றப்படும்.
இந்தத் தொடர் முதன் முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் கோரப்பட்ட தேவையான சீர்திருத்தங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், தற்போது இந்தத் தொடர் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.
போட்டியை நடத்தும் மாற்று நாட்டைப் பரிந்துரைப்பதற்கு முன்னர் ஐசிசி தனது நிலையான மதிப்பீட்டு அளவு கோல்களின் அடிப்படையில் பங்களாதேஷ், இந்தியா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய மூன்று நாடுகளை பரிசீலித்தது. இதன் பின்னர் இந்தியாவைத் தேர்வு செய்ய செப்டம்பர் 2ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒப்புதல் அளித்தது.
ஆகாஷ்
முதன்மை ஆசிரியர்அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




