கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு, 70 நாட்களுக்கு மேலாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை (19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது அந்தத் தொகுதி காலியாகியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் களமிறங்க வேண்டுமெனக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாடு - ஆந்திரா முதலீட்டுப் போட்டி: நாரா லோகேஷின் பதிலால் பரபரப்பு!
தமிழ்நாட்டின் முதலீட்டுத் தகவல்கள் ஆந்திரப் பிரதேசத்திற்குக் கசிந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் சமூக வலைத்தளத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




