சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

சுமி•28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி, திபெத் – நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து, போடே கோஷி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் ரசுவா, நுவாகோட், சித்வான் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதுவரை 1,300க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், 5,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்ற 213 பேரும் அடங்குகின்றனர்.

மூன்று மாதங்களாகியும் காணாமல் போனவர்களின் நிலை தெரியாததால், அவர்களை உயிரிழந்தவர்களாக அறிவிக்கும் நடவடிக்கையை நேபாளத்தின் தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் ஆரம்பித்துள்ளது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் திருத்தங்கள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், உறவினர்கள் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதிக்கு முன்னர் நேபாளத்திலுள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் 7 ஆண்டு வரவு செலவுத் திட்ட உச்சிமாநாடு உடன்பாடின்றி நிறைவு

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2028 முதல் 2034 வரையிலான ஆண்டுகளுக்கான 7 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு, பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரில் கூட்டப்பட்ட ஐரோப்பிய பேரவையின் சிறப்பு உச்சிமாநாடு எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm