சுவிஸ்: 14°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் புதிய விதிகள்

VIGNESWARAN ABIRAMY•27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில்  புதிய விதிகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் புதிய விதிகள் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய விதிகள் கடுமையாக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழு உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழுவின் மாதாந்த ஊடக சந்திப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகக் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (27) முற்பகல் நடைபெற்றபோது இதனை அவர் கூறினார்.

இதற்கு அமைய அடுத்த கிரிக்கெட் பருவத்திலிருந்து தேசிய கிரிக்கெட் வீரர்கள் அதிகபட்சமாக லங்கா பிறீமியர் லீக் உட்பட மூன்று தொழில்முறை லீக் கிரிக்கெட் தொடர்களில் மாத்திரம் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

இதன் மூலம் தேசிய வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் எதிர்கொள்ளும் பணிச் சுமை குறைக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், தேசிய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் நிலையில் உள்ள வீரர்கள், அல்லது ஓய்வு பெற்ற வீரர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.


VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை குறைந்த ஓட்டங்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி, அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தில்ஷான் மதுஷங்க புயல்: 110 ரன்களில் பாகிஸ்தான் ஆல்-அவுட்!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவின் அச்சுறுத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய பாகிஸ்தான் அணி, தனது மோசமான பேட்டிங் வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வெறும் 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுடனும் ஒரே நேரத்தில் கைகோர்த்த பொல்லார்ட்!

தென்னாப்பிரிக்காவின் SA20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்து தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தமிழ் இளைஞர்கள் பதக்கங்கள் சுவீகரிப்பு

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள சூர்சே பகுதியில் நடைபெற்ற தேசிய கராத்தேப் போட்டியில், ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் கழகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளம் வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm