சுவிட்சர்லாந்தில் 2 ஓநாய் கூட்டங்களை முற்றிலும் அழிக்கக் கோரிக்கை: Valais மாகாண அரசு அதிரடி விண்ணப்பம்!
சுவிட்சர்லாந்தில் 2 ஓநாய் கூட்டங்களை முற்றிலும் அழிக்கக் கோரிக்கை: Valais மாகாண அரசு அதிரடி விண்ணப்பம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்தில் உள்ள இரண்டு ஓநாய் கூட்டங்களை (Augstbord மற்றும் Nanz Valley) குட்டிகள் உட்பட முற்றிலும் அழிக்க அனுமதி கோரி சுவிஸ் கூட்டாட்சி சுற்றுச்சூழல் அலுவலகத்திடம் மாகாண அரசு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.
கடந்த கோடைகால மேய்ச்சல் காலத்தில், ஓநாய்களின் 84 தாக்குதல்களில் சுமார் 219 கால்நடைகள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆக்ஸ்ட்போர்டு மற்றும் நான்ஸ் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகளவில் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெண்டாஸ் (Nendaz) மற்றும் லெஸ் டூல்ஸ் (Les Toules) ஆகிய பகுதிகளில் உள்ள ஓநாய் கூட்டங்களில் பிறந்துள்ள குட்டிகளில் மூன்றில் இரண்டு பங்கைக் அழிக்கவும் மாகாண நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
சுவிட்சர்லாந்தில் இன்று தீர்மானமிக்க வாக்கெடுப்பு: தாவர அடிப்படையிலான உணவுப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மக்கள் தீர்ப்பு!
சுவிட்சர்லாந்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வரும் முக்கிய வாக்கெடுப்பில், நாட்டின் Food Initiative மற்றும் நிலையான விவசாயம் குறித்த திட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷெங்கன் தகவல் அமைப்பில் புதிய எச்சரிக்கைகள் அக்டோபர் 1 முதல்
சுவிட்சர்லாந்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல், ஷெங்கன் தகவல் அமைப்பில் புதிய வகையான தேடல் மற்றும் தகவல் எச்சரிக்கைகளை அதிகாரிகள் பயன்படுத்த முடியும்.
சுவிஸ்: இயற்கை பால் விலை அக்டோபர் முதல் அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கான உற்பத்தியாளர் விலை, அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரு கிலோகிராமுக்கு 3 சென்டிம்கள் அதிகரிக்கிறது.
சுவிட்சர்லாந்து – கொசோவோ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
சுவிட்சர்லாந்தை உள்ளடக்கிய EFTA நாடுகளுக்கும் கொசோவோ குடியரசுக்கும் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




