மொரிஷியஸை 3 - 2 என வீழ்த்தி கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது இலங்கை!

மொரிஷியஸை 3 - 2 என வீழ்த்தி கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது இலங்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
மொரிஷியஸ் தேசிய விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (5) சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த மொரிஷியஸ் அணிக்கு எதிரான சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் இந்த வெற்றியானது மிகப் பெரிய வெற்றியாக பதிவானது.
மொரிஷியஸுக்கு எதிராக விளையாடிய முதலாவது சந்தர்ப்பத்திலேயே இலங்கை வெற்றியீட்டியது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.பயண வழிகாட்டி
'இது ஒரு மைல் கல் வெற்றி. இதற்காகத்தான் கடந்த இரண்டு வருடங்களாக அணியைக் கட்டி எழுப்பினோம். அடுத்தது தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்' என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் பேருவகையுடன் தெரிவித்தார்.
உலக கால்பந்தாட்ட தரவரிசையில் தன்னைவிட 8 இடங்கள் முன்னிலையில் உள்ள மொரிஷியஸுக்கு ஈடுகொடுத்து விளையாடிய இலங்கை ஆரம்பம் முதல் கடைசிவரை விடாமுயற்சியுடன் விளையாடி மகத்தான வெற்றியை ஈட்டியது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
டென்னிஸ் களம்: ஜப்பான் ஓபனை வென்றார் அல்காரஸ்... சீனா ஓபனில் சாம்பியன் பட்டம் தட்டினார் ஜோகோவிச்!
ஜப்பான் மற்றும் சீனா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றது.
மலேசிய கிராண்ட் பிரீ பந்தயம்: வெர்ஸ்டாப்பனுக்கு சாம்பியன் பட்டம்; ஹாமில்டனின் த்ரில்லிங் மேடை ஏற்றம்!
பரபரப்பாக நடைபெற்ற 2026-ம் ஆண்டிற்கான ஃபார்முலா 1 மலேசிய கிராண்ட் பிரீ பந்தயத்தில், ரெட் புல் அணியின் நட்சத்திர வீரர் மக்ஸ் வெர்ஸ்டாப்பன் தனது அபாரமான கார் ஓட்டும் திறனை வெளிப்படுத்தி நடப்பு பருவத்தின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி: 16 பேர் கொண்ட ஒருநாள் குழாம் அறிவிப்பு!
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




