ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்பு: புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்பு: புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகம், ஒழுங்குபடுத்தல், மேம்பாடு மற்றும் செயற்பாடுகளுக்கான புதிய சட்டக் கட்டமைப்பை உள்ளடக்கிய 'ஸ்ரீலங்கா கிரிக்கெட் சட்டமூலத்தை' அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தை முற்றாக மறுசீரமைக்கும் நோக்கில், புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்காக கடந்த 2026 ஜூன் 8 ஆம் திகதி அமைச்சரவையினால் முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அரசாங்கச் சட்ட வரைஞரினால் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் அவதானிப்புகள் மற்றும் ஆலோசனைகளும் இதில் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் நல்ஆளுகையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இச்சட்டமூலம், விரைவில் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




