சுவிஸ்: 9°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான நிலையில் இலங்கை!

சுமி•19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான நிலையில் இலங்கை!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான நிலையில் இலங்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிக மோசமான நிலையில் இலங்கை இருக்கிறது.

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிக மோசமான நிலையில் இலங்கை இருக்கிறது.

 

இப் போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பதாக இருந்தால் போட்டியின் கடைசி நாளான நாளைய தினம் இலங்கை கடுமையாக போராட வெண்டிவரும். ஆனால், 6 விக்கெட்கள் மாத்திரமே மீதம் இருப்பதால் இலங்கை முழு நாளும் தாக்குப் பிடிக்கும் என்பது சந்தேகமாகும்.

 

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 373 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை, போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

இதன் படி இலங்கை வெற்றிபெறுவதற்கு மேலும் 289 ஓட்டங்களைப் பெறவேண்டும். அதேவேளை, இந்தியா வெற்றிபெறுவதற்கு 6 விக்கெட்கள் வீழ்த்தப்படவேண்டும்.

 

இன்றைய தேநீர் இடைவெளைக்குப் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை சீரான இடைவெளியில் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாற்றம் அடைந்தது.

 

 பின்னர் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, முதலாவது இன்னிங்ஸில் கன்னிச் சதம் குவித்த சொனால் தினூஷ ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி விக்கெட்களைத் தக்கவைத்துக்கொண்டு நான்காம் நாள் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

 

தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுடனும் சொனால் தினூஷ 25 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

 

அவர்கள் இருவரும் நாளைய கடைசி நாளன்று முதலாவது ஆட்டநேரம் முழுவதும் தாக்குப் பிடித்து துடுப்பெடுத்தாடவேண்டிவரும். அல்லது இலங்கை தோல்வி அடைவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும்.

 

இப் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முயற்சித்து சகல விக்கெட்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.

 

கே.எல். ராகுல், தேவ்டத் படிக்கல், ரிஷாப் பான்ட் ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

 

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.


சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுடனும் ஒரே நேரத்தில் கைகோர்த்த பொல்லார்ட்!

தென்னாப்பிரிக்காவின் SA20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்து தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தமிழ் இளைஞர்கள் பதக்கங்கள் சுவீகரிப்பு

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள சூர்சே பகுதியில் நடைபெற்ற தேசிய கராத்தேப் போட்டியில், ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் கழகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளம் வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கடைசி விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்ப்பு: இங்கிலாந்தை வீழ்த்தி உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து வெற்றிகரமாக இலக்கை விரட்டிய சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது. இதன் மூலம் 51 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் வசம் இருந்த உலக சாதனையை பாகிஸ்தான் முறியடித்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

டி20-யில் 200 வெற்றிகளை ருசித்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் படைத்தது இந்தியா!

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் இந்திய அணி, சர்வதேச டி20 போட்டிகளில் தனது 200-வது வெற்றியைப் பதிவு செய்து, இந்த மைல்கல்லை எட்டிய உலகின் முதல் அணி என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm