
பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி: 16 பேர் கொண்ட ஒருநாள் குழாம் அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
குசல் மெண்டிஸ் தலைமையிலான இந்த அணியில், தசுன் ஷானக்க, சஹான் ஆராச்சிகே மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை, சோபிக்கத் தவறிய சரித் அசலங்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காயமடைந்துள்ள பெத்தும் நிஸ்ஸங்கவின் பங்கேற்பு அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும்.
இலங்கை அணி முதற்கட்டமாக 3 T20 போட்டிகளிலும், அக்டோபர் 18 முதல் 27 வரை முக்கோண ஒருநாள் தொடரிலும், தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இலங்கை குழாம்:
குசல் மெண்டிஸ் (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, கமில் மிஷார, பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிக்கே, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷண, சசிந்து கொழும்பகே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, எஷான் மாலிங்க.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
மலேசிய கிராண்ட் பிரீ பந்தயம்: வெர்ஸ்டாப்பனுக்கு சாம்பியன் பட்டம்; ஹாமில்டனின் த்ரில்லிங் மேடை ஏற்றம்!
பரபரப்பாக நடைபெற்ற 2026-ம் ஆண்டிற்கான ஃபார்முலா 1 மலேசிய கிராண்ட் பிரீ பந்தயத்தில், ரெட் புல் அணியின் நட்சத்திர வீரர் மக்ஸ் வெர்ஸ்டாப்பன் தனது அபாரமான கார் ஓட்டும் திறனை வெளிப்படுத்தி நடப்பு பருவத்தின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
ஒரு சில போட்டிகளை வைத்து மதிப்பிட முடியாது! ரோகித் சர்மா , விராட் கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய சுப்மன் கில்!
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் தற்போதைய ஃபார்ம் மற்றும் ஆட்டம் குறித்துச் சமீபகாலமாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
2-வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி…
இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 406 என்ற வெற்றியிலக்கை இலகுவில் எட்டி 8 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்று இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
2027 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 10-ல் நடக்கிறது
2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




