முதுகுப்புறத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க!

முதுகுப்புறத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புகிறார் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தில் இலங்கை அணியில் இடம்பெற்ற சுழல்பந்துவீச்சாளர் வனிந்த ஹசரங்க, உபாதைக்குள்ளானதால் நாடு திரும்புவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வியாழக்கிழமை (24) மாலை அறிவித்தது.
இங்கிலாந்துக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முந்தைய தினத்தன்று பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது தனக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக வனிந்து ஹசரங்க அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது போட்டியில் அவர் விளையாடததுடன் இன்றைய போட்டி உட்பட எஞ்சிய இரண்டு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என அணி முகாதை;துவம் அறிவித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அவர் நாடு திரும்பி இயல்பு நிலையை அடைவதற்கான மறுவாழ்வு சிகிச்சைக்கு உள்ளாவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் தெரிவித்தது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹாரி கேனின் தங்கப்பந்து விருதுக்குப் பிரேசில் ரொனால்டோ பாராட்டு!
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன், தங்கப்பந்து விருதை வென்றமைக்கு பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த விருது ஹாரி கேனுக்கு முழுமையாகத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஆசியக் கிண்ண அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி அபார வெற்றி!
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இலங்கை 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து T20 அணியின் புதிய தலைவராக டாம் பாண்டன் நியமனம்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியின் தலைவராக டாம் பாண்டன் (Tom Banton) நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




