
ஆசிய பரா நீச்சலில் இலங்கையின் கலினாவுக்கு வெள்ளிப் பதக்கம் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அய்ச்சி - நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் நேற்றைய தினம் இலங்கைக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
நகோயா சிட்டி ஜெனரல் ஜிம்னாசியம் ரெய்ன்போ தடாகத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற S9 வகைப் பிரிவு பெண்களுக்கான 400 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் இலங்கை மாற்றுத்திறனாளி கலினா பஸ்நாயக்க வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அப் போட்டியை 4 நிமிடங்கள், 59.58 செக்கன்களில் நீந்திக்கடந்தே அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றெடுத்தார்.
அப் போட்டியில் சீனாவின் மாற்றுத்திறனாளி ஜியாலிங் சூ (4:56.07) தங்கப் பதக்கத்தையும் ஜப்பான் மாற்றுத்திறனாளி எம்மா மயேடா (5:21.04) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
கலினா வென்ற பதக்கத்துடன் இலங்கைக்கு இதுவரை இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை குறைந்த ஓட்டங்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி, அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!
தில்ஷான் மதுஷங்க புயல்: 110 ரன்களில் பாகிஸ்தான் ஆல்-அவுட்!
இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவின் அச்சுறுத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய பாகிஸ்தான் அணி, தனது மோசமான பேட்டிங் வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வெறும் 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டுள்ளது.
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுடனும் ஒரே நேரத்தில் கைகோர்த்த பொல்லார்ட்!
தென்னாப்பிரிக்காவின் SA20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் தமிழ் இளைஞர்கள் பதக்கங்கள் சுவீகரிப்பு
சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்திலுள்ள சூர்சே பகுதியில் நடைபெற்ற தேசிய கராத்தேப் போட்டியில், ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் கழகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளம் வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




