சுவிஸ்: 13°C
•
இலங்கை: 31°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

சுவிஸ் techno party துப்பாக்கிச்சூடு: இளம்பெண் உயிரிழப்பு!

ஆகாஷ்•30 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சுவிஸ் techno party துப்பாக்கிச்சூடு: இளம்பெண் உயிரிழப்பு!

சுவிஸ் techno party துப்பாக்கிச்சூடு: இளம்பெண் உயிரிழப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Aarau நகரில் நடைபெற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூட்டில் 22 வயது இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க சுவிஸ் காவற்துறையினர் சர்வதேச எல்லைகள் வரை தீவிர தேடுதல் வேட்டையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள Aarau நகரில் நடைபெற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூட்டில் 22 வயது இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்க சுவிஸ் காவற்துறையினர் சர்வதேச எல்லைகள் வரை தீவிர தேடுதல் வேட்டையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.


Aarau நகரின் Schachen குதிரைப் பந்தய மைதானத்தில், சுமார் 3,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற Aarauer Rave என்ற பிரபல டெக்னோ இசை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் இசை நிறுத்தப்பட்ட சில நிமிடங்களில், மர்ம நபர் ஒருவர் கூட்டத்தை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.துப்பாக்கி சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், அது வானவேடிக்கை என முதலில் நினைத்துள்ளனர். ஆனால், அடுத்தடுத்து குண்டுகள் பாய்ந்ததில் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். சிலர் அங்கிருந்த மேடை மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்குப் பின்னால் மறைந்து தப்பிக்க முயன்றனர்.


அப்போது, குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த 22 வயது இளம்பெண்ணின் முதுகில் குண்டு பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். பலியான பெண் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 24 முதல் 27 வயதுக்குட்பட்ட 4 வாலிபர்களும், ஒரு பெண்ணும் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தப்பியோடிய கொலையாளியைக் பிடிக்க ஆர்காவ் மாநில காவல்துறையினருடன் இணைந்து அண்டை நாடான ஜெர்மனியின் காவல்துறையினரும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அப்பகுதி முழுவதும் ஆயுதம் ஏந்திய காவற்துறையினர் மற்றும் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு தொடர்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் இருந்தால் உடனடியாக தங்களிடம் ஒப்படைக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

13-வது ஓய்வூதியத்துக்கு நிதி திரட்ட VAT வரி உயர்வு – நவம்பர் 29-ல் வாக்கெடுப்பு

சுவிட்சர்லாந்தில் 13-வது அரசு ஓய்வூதியத்துக்கு நிதி திரட்டுவதற்காக மதிப்பு கூட்டு வரியான VAT-ஐ உயர்த்துவது குறித்து நவம்பர் 29-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிஸ் சொத்து மதிப்பீட்டில் 1.8 லட்சம் பிராங்குகள் வரை வேறுபாடு

சுவிட்சர்லாந்தில் ஒரே சொத்தை இரண்டு வெவ்வேறு தரகர்கள் மதிப்பிடும்போது, மதிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் பிராங்குகள் வரை வேறுபாடு ஏற்படலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

உலகளவில் அதிகரிக்கும் கடன் செலவுகள் – சுவிட்சர்லாந்திலும் தாக்கம்

உலகளவில் கடன் பெறுவதற்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் சுவிட்சர்லாந்திலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

சுவிஸ் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் – புதிய நடவடிக்கைகள்

சுவிஸ் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதைத் தடுக்க புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm