சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து பனிப்பாறையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட இருவரின் உடல்கள்!

ஆகாஷ்•19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சுவிட்சர்லாந்து பனிப்பாறையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட இருவரின் உடல்கள்!

சுவிட்சர்லாந்து பனிப்பாறையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட இருவரின் உடல்கள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உருகி வரும் பனிப்பாறையிலிருந்து, 34 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இரு பெல்ஜிய மலையேற்ற வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


 கடந்த 1992-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுவிட்சர்லாந்தின் வைஸ்மீஸ் (Weissmies) சிகரத்தை நோக்கிச் சென்றபோது ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, 39 மற்றும் 41 வயதுடைய இரு பெல்ஜிய வீரர்கள் மாயமாகினர்.

 

அன்றைய காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையில் அவர்களது பை மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், காலநிலை மாற்றத்தால் Trift பனிப்பாறை உருகியதைத் தொடர்ந்து, அங்கு மனித உடல்கள் இருப்பதை ஒரு மலையேற்றப் பயணி கண்டு காவல் துறைக்குத் தகவல் அளித்தார்.

 

மருத்துவ பரிசோதனை மற்றும் டி.என்.ஏ சோதனைகள் மூலம் அவை 1992-ல் காணாமல் போன அதே இரு மலையேற்ற வீரர்களின் உடல்கள் தான் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 புவி வெப்பமயமாதல் காரணமாக ஆல்ப்ஸ் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், பல தசாப்தங்களுக்கு முன் பனிப்பாறைகளுக்குள் சிக்கி புதையுண்டவர்களின் உடல்கள் சமீபகாலமாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

எகிப்தில் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில், சுமார் 2,200 ஆண்டுகள் பழமையான அரச கல்லறையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடும் வறட்சி – வெங்கன் மக்களுக்கு நீரைச் சேமிக்க வேண்டுகோள்!

சுவிட்சர்லாந்தின் பெர்னீஸ் ஓபர்லாந்து பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையமான வெங்கனில், தொடர்ந்து நிலவும் வறட்சியால் குடிநீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் விநியோகக் கூட்டுறவு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொலைக் குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை – 15 ஆண்டுகள் நாடு கடத்தல்!

சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக 28 வயதுடைய சோமாலிய நாட்டவர் ஒருவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர், அவர் 15 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுவிட்சர்லாந்தில் வழக்கத்தை விட மழையும், குறைந்த சூரிய ஒளியுமாகக் கழிந்த நவம்பர்!

சுவிட்சர்லாந்தில் 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கத்தை விட சற்றே வெப்பமான காலநிலையுடன் காணப்பட்ட போதிலும், பல பகுதிகளில் அதிக மழையும், மிகக் குறைந்த சூரிய ஒளியும் பதிவாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm