விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: மாஸ், காமெடி கூட்டணியில் அசத்தல்!

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டிரெய்லர் வெளியானது: மாஸ், காமெடி கூட்டணியில் அசத்தல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ (Baththa) திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் அட்லீ தயாரித்துள்ளார்.
ஊரெல்லாம் பயப்படும் அளவுக்குப் பலக் கதைகளும் வதந்திகளும் உலாவுமளவு மாஸான தோற்றத்திலும், வீட்டிற்குள் மனைவி மற்றும் குழந்தையிடம் அமைதியான குடும்பஸ்தனாகவும் விஜய் சேதுபதி இரு வேறு பரிமாணங்களில் அசத்தியுள்ளார்.
பயமுறுத்தும் ரவுடி போலச் சித்தரிக்கப்பட்டாலும், நகைச்சுவை மற்றும் குடும்பக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது டிரெய்லரின் மூலம் தெரியவருகிறது. இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'காதலன்' கூட்டணி: வெளியானது 'மூன்வாக்' டிரெய்லர்!
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடனப்புயல் பிரபுதேவாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் மீண்டும் இணைந்துள்ள 'மூன்வாக்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்பா உன் ஆராரிரோ’: ‘பேமிலி பாய்’ படத்தின் புதிய பாடல் வெளியானது.
'ஃபேமிலி பாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அப்பா உன் ஆராரிரோ' எனும் உணர்வுப்பூர்வமான பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.
“அரசியல் என்பது ஆசையல்ல; எனக்கு விஜய்யை நடிகராகவே தெரியும்” – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பேசிய கருத்துக்கள் தொடர்பாக எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதிகளில் படப்பிடிப்பு: 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த அனுபவத்தைப் பகிர்ந்த ஆர்.கே. செல்வமணி!
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகப் பொருத்தமான காடுகளைத் தேடி, சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளதாகப் பிரபல இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




