இந்தியாவின் கேரளாவில் தாத்தாவை கொலை செய்த 13 வயது பேத்தி : காதலன் உட்பட 4 சிறுவர்கள் கைது!

இந்தியாவின் கேரளாவில் தாத்தாவை கொலை செய்த 13 வயது பேத்தி : காதலன் உட்பட 4 சிறுவர்கள் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்தியாவின் கேரள மாநிலம் ஆலப்புழாவில் 65 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி, அச்சிறுமியின் 17 வயது காதலன் மற்றும் அவனது 16, 17 வயதுகளையுடைய இரு நண்பர்கள் என 4 சிறுவர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 17ஆம் திகதி, ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில் கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் இம்முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவத்தின்போது, பேத்தியின் தாய் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாலும், பாட்டியும் தாயுடன் சென்றிருந்ததாலும் முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
உறவினர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, 13 வயது பேத்தியின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் காணப்பட்டதால், ஆலப்புழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான பொலிஸார் சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அதில், அவரே திட்டமிட்டுக் கொலையை ஒருங்கிணைத்ததை ஒப்புக்கொண்டார்.
சிறுமி வீட்டிலிருந்தபடியே திட்டமிட, அவரது காதலன் மற்றும் நண்பர்கள் இருவரும் வீட்டின் பின்புற காற்றோட்டப் பாதை வழியாக உள்ளே நுழைந்து, முதியவரை கொலை செய்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவ்விதமாக, திருடிய நகைகளில் 4.5 பவுன் நகைகளை குறித்த சிறுவர்களின் வீடுகள் மற்றும் அடகுக் கடைகளில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
4 கோடி ஆண்டுகள் பழமையான அரிய புதைபடிவங்கள் கலிஃபோர்னியாவில் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சுமார் 4 கோடி (40 மில்லியன்) ஆண்டுகள் பழமையான அரிய வகை புதைபடிவங்கள் (Fossils) கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் தயார்: அமெரிக்காவுக்கு அப்பாஸ் அராக்சி புதிய முன்மொழிவு!
ஹார்முஸ் நீரிணையை ஒரு வாரத்திற்குள் மீண்டும் திறக்க வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவிடம் முன்மொழிந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் கட்சியின் பேரணி அக்டோபர் 4-க்கு ஒத்திவைப்பு!
பாகிஸ்தானின் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, இஸ்லாமாபாத் நோக்கிய தனது கண்டனப் பேரணியை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடனான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு!
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வந்த வர்த்தக மற்றும் தூதரக மோதல்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.



