சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இந்த 43 பேரில் 17 பேர் துபாயிலும், 14 பேர் இந்தியாவிலும், 3 பேர் ஜப்பானிலும் வசிப்பதாகக் குறிப்பிட்டார். ஏனைய 9 பேர் மேலும் ஒன்பது நாடுகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குற்றச் சந்தேகநபர்களுக்கு எதிராக 233 சர்வதேச சிவப்பு அறிவிப்புகளும், 92 நீல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து ஏற்கனவே 72 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேகநபர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல் 'B-/B' ஆக உயர்வு
சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான 'S&P Global', இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தலை உயர்த்தியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




