சுவிஸ்: 7°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பெருவில் பதிவான 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

குரு•21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பெருவில் பதிவான 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

பெருவில் பதிவான 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மத்திய பெருவில் வியாழக்கிழமை (20) அன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

மத்திய பெருவில் வியாழக்கிழமை (20) அன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

 

எனினும், உடனடி உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்த நிலநடுக்கம் 61.52 மைல் (99 கிலோமீட்டர்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இதன் மையம் ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள ‘அனிசோ’ (Aniso) பகுதிக்கு வடமேற்கே 19.26 மைல் (31 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்திருந்ததாகவும் USGS கூறியது.

 

நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழம் காரணமாகவே பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக பெருவின் புவி இயற்பியல் நிறுவனத்தின் (IGP) தலைவர் ஹெர்னாண்டோ டவேரா தெரிவித்தார்.

 

பெருவின் புவி இயற்பியல் நிறுவனம் ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தை 7.2 என்று மதிப்பிட்டிருந்தது.

 

உலகின் இரண்டாவது மிகப்பெரிய செம்பு உற்பத்தியாளரான இந்த தென் அமெரிக்க நாடு, ‘பசிபிக் நெருப்பு வளையம்’ (Pacific Ring of Fire) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.

 

இப்பகுதியில்தான் உலகின் சுமார் 85 சதவீத நிலநடுக்கச் செயல்பாடுகள் பதிவாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
குரு

குரு

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை வெளியிடுகிறது பிரித்தானியா!

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வெளியிடவுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கனடா இராணுவத்தில் புதிய F-35 போர் விமானங்கள் இணைப்பு

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன F-35 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஆலோசனைகளில் கனட அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக இரண்டு புதிய F-35 போர் விமானங்களைக் கனடா பெற்றுக்கொண்டுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மாணவர் சக்தியால் வென்ற ஜனநாயகம்: செர்பியாவில் ஒரு தசாப்த கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது!

ஐரோப்பிய நாடான செர்பியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் பிரம்மாண்ட போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அதிபர் அலெக்ஸாண்டர் வுசிக்கின் (Aleksandar Vučić) ஆட்சி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm