சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

மகாராஷ்டிராவில் வீடு தீக்கிரையாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி!

VIGNESWARAN ABIRAMY•9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
மகாராஷ்டிராவில் வீடு தீக்கிரையாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி!

மகாராஷ்டிராவில் வீடு தீக்கிரையாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப பலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தின் எட்ஷி கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீயில் கருகி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கீழ்தளத்தில் மளிகைக் கடையும் மேல் தளத்தில் வீடும் அமைந்திருந்த கட்டடத்தில், தீபாவளிக்காக ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கில் இருந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் மளமளவெனப் பற்றிய தீ மேல் தளத்திற்கும் பரவியதில், 2 குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் மாத்திரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளான்.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm