சுவிஸ்: 15°C
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
அரசியல்

இலங்கையிலிருந்து சென்னை திரும்பிய 55 வயது பயணி திடீர் மரணம்

செந்தில் குமார்16 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையிலிருந்து சென்னை திரும்பிய 55 வயது பயணி திடீர் மரணம்

இலங்கையிலிருந்து சென்னை திரும்பிய 55 வயது பயணி திடீர் மரணம் குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கைக்கு சுற்றுலா சென்று சென்னை திரும்பிய 55 வயதுடைய நபர் ஒருவர், சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா சென்று சென்னை திரும்பிய 55 வயதுடைய நபர் ஒருவர், சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றிருந்த நிலையில், தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.

விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் சுங்க சோதனைகளை முடித்த பின்னர், வீட்டிற்குச் செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளார்.

மெட்ரோ ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அவதானித்த பயணிகள் மற்றும் மெட்ரோ நிலைய ஊழியர்கள் உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி வழங்கியபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விமான நிலைய பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த திடீர் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட பாடசாலை விடுமுறை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்கு உட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

7 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செஞ்சோலை உயிரிழப்புகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (14.08.2026) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

14 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm