
சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சென்னையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சலுடன் தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி மற்றும் தொடர் தும்மல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சிலருக்கு வாய் கசப்பு மற்றும் பசியின்மை காரணமாக உணவு சாப்பிடுவதிலும் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் சுமார் 5 நாட்கள் வரை நீடிக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எச்1என்1 வகை பன்றிக்காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதால், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காய்ச்சல் பாதித்தவர்கள் முகக்கவசம் அணிவதுடன், மற்றவர்களிடம் இருந்து தேவையான இடைவெளியை கடைப்பிடிப்பதும், மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




