சுவிஸ்: 17°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

இளம் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காக அதிரடிச் சட்டம்: நியூசிலாந்தில் சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள்!

சுமி•24 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இளம் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காக அதிரடிச் சட்டம்: நியூசிலாந்தில் சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள்!

இளம் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காக அதிரடிச் சட்டம்: நியூசிலாந்தில் சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சமூக ஊடகங்களால் இளம் தலைமுறையினர் சந்தித்து வரும் மனநல பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நியூசிலாந்து அரசாங்கம் ஒரு முக்கிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது.

சமூக ஊடகங்களால் இளம் தலைமுறையினர் சந்தித்து வரும் மனநல பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நியூசிலாந்து அரசாங்கம் ஒரு முக்கிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது.


நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய பின் பேசிய அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், இன்றைய இளைய சமுதாயம் சமூக ஊடகங்களின் அடிமைத்தனத்தாலும், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 


13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 மணி நேரத்திற்கும் மேலாகச் சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிடுவதாகவும், இது அவர்களது கல்வி, தூக்கம் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் மோசமாக பாதிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.


இந்தச் புதிய சட்டத்தின் கீழ்,Instagram, TikTok, Snapchat மற்றும் Facebook போன்ற முன்னணிச் சமூக ஊடகத் தளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் முறையைக் கட்டாயமாக்க வேண்டும்.


Facial age estimation, டிஜிட்டல் அடையாள ஆவணங்கள் மூலம் பயனர்களின் வயதைச் சரிபார்க்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் பெரு நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக ஆஸ்திரேலியாவில் இதே போன்ற சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உலகளவில் பல நாடுகள் குழந்தைகளைப் பாதுகாக்க இது போன்ற தீவிரக் நடவடிக்கைகளில் இறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உக்ரைனிய ட்ரோன் வீச்சு: இந்திய மாலுமிகள் பயணித்த கச்சா எண்ணெய் கப்பல் சேதம்!

23 இந்திய மாலுமிகளுடன் பயணித்த வர்த்தக எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

டெல்லியில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணி: தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு!

நாடாளுமன்ற வீதியிலிருந்து தேர்தல் ஆணையத் தலைமையகம் வரை ‘இந்தியா’ கூட்டணி நடத்திய பேரணியின்போது டெல்லியில் நேற்றையதினம் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹெஸ்பொல்லா ராணுவப் பிரிவுக்குத் தடை: லெபனான் அரசு அதிரடி உத்தரவு!

லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் அனைத்து விதமான ராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு செயல்பாடுகளுக்கும் உடனடியாகத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm