லண்டன் பயணத்தில் அதிரடி சாதனை: ரூ.15,300 கோடி முதலீட்டுடன் திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்!

லண்டன் பயணத்தில் அதிரடி சாதனை: ரூ.15,300 கோடி முதலீட்டுடன் திரும்புகிறார் முதலமைச்சர் விஜய்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்துள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் நடத்திய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தத் தொழில் முதலீடுகளின் மூலம் தமிழகத்தில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெருக்கவும் முதலமைச்சரின் இந்த லண்டன் பயணம் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது எனத் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




