
அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை: நடப்பாண்டில் 1,700 இந்தியர்கள் நாடு கடத்தல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
நடப்பு 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 1,700 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா உறுதியாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார். அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படும் நபர்களின் இந்தியக் குடியுரிமை முறையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதாகவும், குடியேற்ற விவகாரங்களில் அமெரிக்காவுடன் இந்தியா தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக கடந்த 2025-ஆம் ஆண்டில் 3,567 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




