சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

காசாவின் தற்போதைய நிலை குறித்து ஏஞ்சலினா ஜோலி உருக்கம்: "மனிதநேய அடிப்படையில் போரை உடனடியாக நிறுத்துங்கள்!"

VIGNESWARAN ABIRAMY•5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
காசாவின் தற்போதைய நிலை குறித்து ஏஞ்சலினா ஜோலி உருக்கம்: "மனிதநேய அடிப்படையில் போரை உடனடியாக நிறுத்துங்கள்!"

காசாவின் தற்போதைய நிலை குறித்து ஏஞ்சலினா ஜோலி உருக்கம்: "மனிதநேய அடிப்படையில் போரை உடனடியாக நிறுத்துங்கள்!" குறித்த பிரத்யேக ஒளிப்படம்

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காசா முனையின் 82 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் முற்றாக அழிவடைந்துள்ளதாகக் கூகுள் எர்த் (Google Earth) செயற்கைக்கோள் தரவுகள் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

காசாவில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவின் கொடூரத்தை விளக்கும் கூகுள் எர்த் புகைப்படங்களை பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதருமான ஏஞ்சலினா ஜோலி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து தீவிர கவலையை வெளியிட்டுள்ளார்.

போருக்கு முன்பிருந்த காசாவின் செழிப்பான தோற்றத்தையும், தற்போதைய இடிபாடுகளையும் ஒப்பிடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், லட்சக்கணக்கான மக்கள் தங்குமிடமின்றியும், அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதநேய அடிப்படையில் போரை உடனடியாக நிறுத்தி, காசா மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தடையின்றி கிடைக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏஞ்சலினா ஜோலி உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm