
வங்கதேசம் – சீனாவின் J-10CE போர் விமானங்கள் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சீனாவிடம் இருந்து 20 J-10CE போர் விமானங்களை வாங்கும் வங்கதேசம்
வங்கதேசம், சீனாவிடம் இருந்து 20 J-10CE போர் விமானங்களை சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் வாங்க முடிவு செய்துள்ளது.
விமானப்படையை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கொள்முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற India–Pakistan மோதலில் J-10CE விமானங்கள் பயன்படுத்தப்பட்டதையும், அவை Rafale விமானங்களை வீழ்த்தியதாகக் கூறப்பட்ட தகவல்களையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வங்கதேச தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், Rafale விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்களுக்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் வெளியாகவில்லை.
மேலும், சீனாவிடம் இருந்து ஹெலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன்களையும் வாங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹெஸ்பொல்லா ராணுவப் பிரிவுக்குத் தடை: லெபனான் அரசு அதிரடி உத்தரவு!
லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் அனைத்து விதமான ராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு செயல்பாடுகளுக்கும் உடனடியாகத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!
2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் Francis Halzenஎன்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் தேர்தல் களம் சூடுபிடிப்பு: அதிபர் லூலாவை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவாளர் பிளாவியோ!
பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




