மந்தகதியில் பந்துவீச்சு: பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு ஐ.சி.சி அபராதம்!

மந்தகதியில் பந்துவீச்சு: பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு ஐ.சி.சி அபராதம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், மந்தகதியில் ஓவர் வீசியதற்காக பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.
ஒதுக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் பாகிஸ்தான் அணி 2 ஓவர்களும், இலங்கை அணி 1 ஓவரும் குறைவாகப் பந்துவீசியமை கண்டறியப்பட்டதை அடுத்து, ஐ.சி.சி போட்டி நடுவர் ஜெஃப் குரோ இந்த அபராதத்தை விதித்தார்.
இதன்படி, பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அவர்களின் போட்டித் தொகையில் 10 சதவீதமும், இலங்கை அணி வீரர்களுக்கு 5 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அணிகளின் தலைவர்களான ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இக்குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதால், உத்தியோகபூர்வ விசாரணைகள் இன்றி தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் புதிய விதிகள்
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் தேசிய கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய விதிகள் கடுமையாக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழு உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சிதத் வெத்தமுனி தெரிவித்தார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை!
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை குறைந்த ஓட்டங்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி, அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது!
தில்ஷான் மதுஷங்க புயல்: 110 ரன்களில் பாகிஸ்தான் ஆல்-அவுட்!
இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவின் அச்சுறுத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய பாகிஸ்தான் அணி, தனது மோசமான பேட்டிங் வெளிப்பாட்டை வெளிப்படுத்தி வெறும் 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டுள்ளது.
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளுடனும் ஒரே நேரத்தில் கைகோர்த்த பொல்லார்ட்!
தென்னாப்பிரிக்காவின் SA20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




