டெஹ்ரானில் பரபரப்பு: 3 மருத்துவமனைகள் மீது தாக்குதல்! இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி!

டெஹ்ரானில் பரபரப்பு: 3 மருத்துவமனைகள் மீது தாக்குதல்! இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி, தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனையின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக வெளியான தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மகன் மொஜ்தபா காமேனி, சிகிச்சைக்காக டெஹ்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஈரானின் நிபுணர்கள் அவையின் உறுப்பினரான மொஹ்சன் ஹெய்தாரி, கத்தார் நாட்டின் 'அல் அரபி' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மொஜ்தபா காமேனி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், டெஹ்ரானில் உள்ள மூன்று மருத்துவமனைகள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் மூன்றாவது மருத்துவமனை இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிய மொஜ்தபா காமேனி மீட்கப்பட்டார்.
இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பின்னர், 56 வயதான மொஜ்தபா காமேனி இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவர் மிகக் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தபோதிலும், தொடர்ந்து உயிருடன் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அவர் மருத்துவமனை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட செய்தி வெளியாகி சர்வதேச அளவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




