சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி திடீர் ரத்து: கட்டுப்பாட்டை மீறிய கூட்டத்தால் லண்டன் காவல்துறை நடவடிக்கை!

VIGNESWARAN ABIRAMY•16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி திடீர் ரத்து: கட்டுப்பாட்டை மீறிய கூட்டத்தால் லண்டன் காவல்துறை நடவடிக்கை!

லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி திடீர் ரத்து: கட்டுப்பாட்டை மீறிய கூட்டத்தால் லண்டன் காவல்துறை நடவடிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பிரித்தானியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த பொதுக் கூட்டம் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்வு, மக்கள் கூட்டம் எல்லை மீறியதால் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற் கொண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

லண்டனின் மிக உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' பகுதியில் உள்ள சொகுசு விடுதி வளாகத்திற்கு வெளியே முதல்வரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்களும் ஆதரவாளர்களும் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, லண்டன் மாநகரக் காவல் துறையினர் பாதுகாப்பு அச்சத்தை சுட்டிக்காட்டினர்.  

காவல்துறை கோரிக்கை மற்றும் அறிவிப்புபொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் நெரிசலைக் கருத்தில் கொண்டு, நிகழ்வை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மையானது. லண்டன் மாநகரக் காவல்துறையின் கோரிக்கைக்கு இணங்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டும் இச்சந்திப்புத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.  

முதல்வரைக் காண்பதற்காகப் பல மணிநேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய்யின் இந்த விஜயத்தில், பல கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm