சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

கடலோர விதிமீறல் கட்டிடம்: 21 பங்களாக்களுக்குக் கெடு விதித்தது சென்னை மாநகராட்சி!

ஆகாஷ்•28 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கடலோர விதிமீறல் கட்டிடம்: 21 பங்களாக்களுக்குக் கெடு விதித்தது சென்னை மாநகராட்சி!

கடலோர விதிமீறல் கட்டிடம்: 21 பங்களாக்களுக்குக் கெடு விதித்தது சென்னை மாநகராட்சி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ஆடம்பர பங்களாக்கள் மற்றும் கட்டிடங்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ஆடம்பர பங்களாக்கள் மற்றும் கட்டிடங்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய கடலோரப் பகுதிகளில் அமைந்து அமைந்துள்ள சுமார் 21 ஆடம்பர பங்களாக்கள் மற்றும் வீடுகளுக்கு இந்த வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


CRZ-II விதிகளின்படி, அனுமதி அளிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி மற்றும் அனுமதிக்கப்பட்ட கட்டிடப் பரப்பு குறியீட்டை (FSI 0.8) விட அதிகமாகக் கூடுதல் தளங்கள் கட்டப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் கட்டிடங்களைச் உரிமையாளர்கள் காலி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மாநகராட்சி அதிகாரிகளால் கட்டிடங்களுக்குப் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டு, இடிக்கும் நடவடிக்கை தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


மேலும் 3 வீடுகளின் உரிமையாளர்களுக்கு விதிமீறல்களை உடனடியாகச் சீரமைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


கடலோரப் பகுதிகளில் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கடந்த காலங்களில் கண்டறியப்பட்ட கட்டிட உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அண்மையில் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்தே சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் கடலோரப் பகுதி முழுவதிலும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதுடன், விதிமீறி கட்டப்பட்ட மேலும் பல கட்டிடங்கள் மீதும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாயும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

22 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm