
இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனை கைதி ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுப் பெண்ணின் கொடூரப் படுகொலைச் சம்பவத்திற்காக 1996 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 50 வயதான கிறிஸ்டா பைக் (Christa Pike) என்பவருக்கே, நெஷ்வில்லில் உள்ள ரிவர்பெண்ட் பாதுகாப்புச் சிறைச்சாலையில் நச்சு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவருக்கு 'பென்டோபார்பிட்டல்' (pentobarbital) எனும் கெமிக்கல் இருமுறை ஊசி மூலம் செலுத்தப்பட்டபோதிலும், அவர் இறக்காமல் சுயநினைவை இழந்து தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து, அவரது சட்டத்தரணிகள் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, தண்டனை நிறைவேற்றத்தை உடனடியாக நிறுத்துமாறும் அவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்குமாறும் கோரியதாக தெரிவிக்கப்பட்டது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹெஸ்பொல்லா ராணுவப் பிரிவுக்குத் தடை: லெபனான் அரசு அதிரடி உத்தரவு!
லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் அனைத்து விதமான ராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு செயல்பாடுகளுக்கும் உடனடியாகத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!
2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் Francis Halzenஎன்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் தேர்தல் களம் சூடுபிடிப்பு: அதிபர் லூலாவை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவாளர் பிளாவியோ!
பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




