மும்பையில் 'டிஜிட்டல் கைது' மோசடி: 10 நாட்கள் பயமுறுத்தி ₹3.83 கோடியை பறித்த கும்பல்!

மும்பையில் 'டிஜிட்டல் கைது' மோசடி: 10 நாட்கள் பயமுறுத்தி ₹3.83 கோடியை பறித்த கும்பல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு என மிரட்டி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 3.83 கோடி சுருட்டல்! 'டிஜிட்டல் கைது' மோசடி சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு என மிரட்டி ஓய்வுபெற்ற வங்கி மேலாளரிடம் ரூ. 3.83 கோடி சுருட்டல்! 'டிஜிட்டல் கைது' மோசடி சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
தீவிரவாத தடுப்புப் படை (ATS) அதிகாரிகள் போல பேசிய மர்ம நபர்கள், பாதிக்கப்பட்ட முதியவரின் பெயரில் உள்ள சிம் கார்டு மற்றும் வங்கி கணக்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ரூ. 7 கோடி நிதி திரட்ட பயன்படுத்தப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளனர்.
கைது செய்யாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி, வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் சுமார் 10 நாட்கள் அவரைத் தொடர் கண்காணிப்பிலேயே வைத்திருந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி மற்றும் ATS பெயரில் போலி ஆவணங்களை அனுப்பி, விசாரணை முடியும் வரை சேமிப்பு நிதியை குறிப்பிட்ட கணக்குகளுக்கு மாற்ற வைத்துள்ளனர்.
தொடர்ந்து பணம் கேட்டதால் சந்தேகமடைந்த முதியவர், வங்கி மேலாளரைச் சந்தித்து பேசிய பிறகே இது 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் நடந்த சைபர் மோசடி எனத் தெரியவந்தது. சைபர் ஹெல்ப்லைன் 1930 மூலம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மும்பை மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையோ அல்லது அரசு அமைப்புகளோ வீடியோ காலில் யாரையும் 'டிஜிட்டல் கைது' செய்ய முடியாது. இதுபோன்ற போலி அழைப்புகள் வந்தால் உடனே 1930 என்ற சைபர் ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்!
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




