சுவிஸ்: 8°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தீவிர கோடை வறட்சி: வற்றிப்போகும் பிரசித்தி பெற்ற Zurich ஏரி!

சுமி•20 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சுவிட்சர்லாந்தில் தீவிர கோடை வறட்சி: வற்றிப்போகும் பிரசித்தி பெற்ற Zurich ஏரி!

சுவிட்சர்லாந்தில் தீவிர கோடை வறட்சி: வற்றிப்போகும் பிரசித்தி பெற்ற Zurich ஏரி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தில் நிலவிவரும் தீவிர கோடை வறட்சி மற்றும் குறைவான மழைப்பொழிவு காரணமாக, பிரசித்தி பெற்ற Zurich ஏரியின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நிலவிவரும் தீவிர கோடை வறட்சி மற்றும் குறைவான மழைப்பொழிவு காரணமாக, பிரசித்தி பெற்ற ஜூரிச் ஏரியின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

 

Zurich Horn அளவீட்டு மையத்தில் ஏரியின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 404.45 மீட்டராகக் குறைந்துள்ளது. இதற்கு முன் 1952-ஆம் ஆண்டில் 405.46 மீட்டராகப் பதிவானதே மிகக் குறைந்த அளவாக இருந்தது. தற்போது அந்த 74 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

 

ஏரியின் நீர்மட்டம் சரிந்ததால், Horgen-Meilen படகுப் போக்குவரத்தில் கனரக வாகனங்கள் மற்றும் தரைப்பகுதி தாழ்வாக உள்ள கார்கள் ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

குறைந்த நீர்மட்டம் காரணமாகப் பல இடங்களில் படகுச் சவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காகச் சில கரையோரக் குளியல் பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

 

காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்து வரும் சூழலில், ஏரியின் நீர்மட்டத்தைக் கூட்டாட்சி சுற்றுச்சூழல் அலுவலகம் (FOEN) தொடர்ந்து கண்காணித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.


சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

பெலாரஸ் காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்கு: சுவிஸ் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்ட (Enforced Disappearance) விவகாரத்தில், அந்நாட்டின் முன்னாள் சிறப்புப் படை அதிகாரியான யூரி கராவுஸ்கி (Yuri Garavsky) குற்றவாளி என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

போலியான தகவல்கள் குறித்து கவலை அடையும் சுவிஸ் மக்கள் – புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!

சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் பரவி வரும் தவறான மற்றும் போலியான தகவல்கள் (Disinformation) குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாக புதிய சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இணைய உலகில் பரவும் பொய்ச் செய்திகள் ஜனநாயக அமைப்பிற்கே அச்சுறுத்தலாக மாறி வருவதாக சுவிஸ் மக்கள் கருதுகின்றனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நைஜீரியாவில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட சுவிஸ் பெண்மணி சிறப்பு விமானம் மூலம் தாயகம் மீட்பு!

நைஜீரியாவில் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண்மணி, நைஜீரிய தலைநகர் அபுஜாவிலிருந்து (Abuja) சிறப்பு மருத்துவ விமானம் மூலம் சுவிட்சர்லாந்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நைஜீரியாவில் பதிவான ஒரே எபோலா நோயாளி இவராவார்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சர்வதேச தொண்டு நிறுவனத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அதிரடி நடவடிக்கை: MSF-க்கான நிதியுதவி நிறுத்தம்!

அகதிகள் முகாம்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் சுரண்டல் புகார்கள் மற்றும் அது குறித்த தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில், பிரபல சர்வதேச மருத்துவத் தொண்டு நிறுவனமான 'எல்லைகளற்ற மருத்துவர்கள்' (MSF) அமைப்புக்கு வழங்கப்படவிருந்த நிதியுதவியை சுவிட்சர்லாந்து அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm