சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை இலவசமாகப் பார்வையிட அனுமதி.

VIGNESWARAN ABIRAMY•18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை இலவசமாகப் பார்வையிட அனுமதி.

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை இலவசமாகப் பார்வையிட அனுமதி. குறித்த பிரத்யேக ஒளிப்படம்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை (நவம்பர் 19) ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி இலவசமாகப் பார்வையிடலாம் என இந்தியத் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

 இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், இந்த வாரத்தின் முதல் நாளான நாளை இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட அனைத்துக் குடவரை சிற்ப வளாகங்களையும் நுழைவுக் கட்டணம் இன்றிப் பார்வையிடலாம். 

விடுமுறை மற்றும் வார நாட்களில் கட்டணம் செலுத்திப் பார்த்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm