சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

காசா மருத்துவமனை தாக்குதல்: இஸ்ரேலைக் கண்டித்து 18 இஸ்லாமிய நாடுகள் கூட்டறிக்கை.

VIGNESWARAN ABIRAMY•16 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
காசா மருத்துவமனை தாக்குதல்: இஸ்ரேலைக் கண்டித்து 18 இஸ்லாமிய நாடுகள் கூட்டறிக்கை.

காசா மருத்துவமனை தாக்குதல்: இஸ்ரேலைக் கண்டித்து 18 இஸ்லாமிய நாடுகள் கூட்டறிக்கை. குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட 18 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை இஸ்ரேல் மீறியுள்ளதாக 18 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறான தாக்குதல்கள் காசாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் சீர்குலைப்பதாக அந்நாடுகள் எச்சரித்துள்ளன. பொதுமக்களைப் பாதுகாத்து, தடையின்றி மனிதாபிமான உதவிகளை வழங்க இஸ்ரேல் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm