சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனுக்குத் திரும்பும் ஹாரி - மேகன்: குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்!

ஆகாஷ்•21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு4
பகிர்க:WhatsAppFacebook
6 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனுக்குத் திரும்பும் ஹாரி - மேகன்: குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்!

6 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனுக்குத் திரும்பும் ஹாரி - மேகன்: குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பிரித்தானிய அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விலகி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதியினர் தற்போது மீண்டும் பிரிட்டனுக்கே திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய அரச குடும்பப் பொறுப்புகளில் இருந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விலகி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதியினர் தற்போது மீண்டும் பிரிட்டனுக்கே திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவர்களின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி (7) மற்றும் இளவரசி லிலிபெட் (5) ஆகியோர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரித்தானியாவில் உள்ள பள்ளியில் படிக்கவுள்ளனர். இதற்காக அவர்கள் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளனர்.


லண்டனுக்கு வெளியே ஒரு தனியார் மற்றும் அரச குடும்பத்தைச் சாராத சொந்தமான அல்லது வாடகை வீட்டைத் தேடி அங்கு குடியேறத் திட்டமிட்டுள்ளனர்.


இருப்பினும், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அவர்களின் மாளிகையும், போர்ச்சுகலில் உள்ள விடுமுறை கால வீடும் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


இந்தத் திரும்புதல் என்பது மீண்டும் அதிகாரப்பூர்வ அரச குடும்பப் பணிகளுக்குத் திரும்புவதைக் குறிக்கவில்லை என்றும், அவர்கள் வழக்கமான தனிநபர்களாகவே அங்கு வாழவுள்ளனர் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த முடிவு குறித்து பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் அதிக நேரம் செலவிட இது உதவும் என அவர் வரவேற்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரி குடும்பத்தினர் மீண்டும் பிரிட்டனுக்குத் திரும்பவுள்ள இந்த முடிவு சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm