சவூதி அரேபியா மீது மீண்டும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (30) மீண்டும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் அப்கியூக் நகரில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம், தமாம் நகரில் உள்ள கிங் பகத் சர்வதேச விமான நிலையம், நிஜ்ரன் பகுதியில் உள்ள இராணுவ படைத்தளம் போன்ற பல இடங்களில் ஹூதியினர் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை இந்தத் தாக்குதல்களை சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஹூதியினர் அனுப்பிய ஏவுகணையின் சிதறல் பட்டு சவூதியின் தலைநகர் ரியாத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சவூதி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களின் விளைவாக பல வாகனங்கள் சேதமடைந்திருப்பதாகவும் சவூதி அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
ஏமன் நாட்டில் அரசு தரப்புக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் சவூதி, ஈரான் ஆகிய இரு நாடுகள் தலையிட்டு, தாமும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதும் இடம்பெற்று வருகிறது.

YOGALINGAM DILAKSHIKA
செய்தியாளர்தொடர்புடைய செய்திகள் (Related News)
ஜெர்மனியில் இன்று பிரமாண்ட போராட்டம்: 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் வீதிகளில் இறங்க ஏற்பாட்டாளர்கள் திட்டம்!
ஜெர்மனி முழுவதும் சனிக்கிழமையன்று (இன்று) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களில் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கேள்வி கேட்ட பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்!
செய்தியாளர் சந்திப்பில் தனியுரிமை தொடர்பான கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவ கேலி (Body Shaming) செய்து பேசிய சம்பவம் ஊடக உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இராணுவ பலத்தை உயர்த்தும் வடகொரியா: ஏ.ஐ ட்ரோன்களை உருவாக்கத் தலைவர் கிம் உத்தரவு!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் நவீன ஆளில்லா விமானங்களை வடகொரியா தீவிரமாக உருவாக்கி வருகிறது.
நாடாளுமன்ற விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் அஞ்சுவது ஏன்? - அமித் ஷா பகிரங்கக் கேள்வி!
வாக்கு திருட்டு தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




