சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சுயசரிதை எழுதினேன் - சோனியா காந்தி.

VIGNESWARAN ABIRAMY•17 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சுயசரிதை எழுதினேன் - சோனியா காந்தி.

பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சுயசரிதை எழுதினேன் - சோனியா காந்தி. குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் சுற்றிப் பல பொய்கள் பின்னப்பட்டுள்ளதாகவும், உண்மையற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தனது சுயசரிதை நூலை எழுதியதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

'பிலாங்கிங்: எ ஜேர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey of Love) என்ற தலைப்பில் சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நூலின் வெளியீட்டு விழா புதுடெல்லியில் நேற்று (16) நடைபெற்றது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், தனது கணவர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வருவதைத் தான் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிவித்தார்.

மேலும், ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு தான் ஒரு குழந்தையாக மாறிவிட்டதாகவும், தனது பிள்ளைகளான ராகுலும் பிரியங்காவும் தனக்குப் பெற்றோராக மாறி அரவணைத்ததாகவும் சோனியா காந்தி உருக்கமாகக் குறிப்பிட்டார்.

இதுவரை இந்தச் சுயசரிதை நூலின் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளதாகப் பதிப்பகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm