சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

இலங்கையில் தங்கத்தின் விலை 7,000 ரூபாயினால் அதிரடி வீழ்ச்சி!

VIGNESWARAN ABIRAMY•20 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையில் தங்கத்தின் விலை 7,000 ரூபாயினால் அதிரடி வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை 7,000 ரூபாயினால் அதிரடி வீழ்ச்சி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று 7,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளது.

உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது.

இதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய தரவுகளுக்கு அமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்து 17 ஆயிரத்து 400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்து 23 ஆயிரத்து 800 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை வீழ்ச்சி, தங்க ஆபரணக் கொள்வனவாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm