சுவிஸ்: 21°C
•
இலங்கை: 29°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

சுற்றுச்சூழல் துறையில் இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி

செந்தில் குமார்•19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சுற்றுச்சூழல் துறையில் இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி

சுற்றுச்சூழல் துறையில் இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி குறித்த பிரத்யேக ஒளிப்படம்

புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தி ஃபியூச்சர் ஆஃப் என்விரான்மென்ட் அண்ட் கிளைமேட் டைனமிக்ஸ்’ என்ற தலைப்பிலான இந்த இரண்டு நாள் மாநாட்டை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு, உலக சராசரியில் பாதிக்கும் குறைவாகவே இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை முன்கூட்டியே எட்டிய ஒரே ஜி-20 நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட தூய்மையான எரிசக்தித் துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்ல முடியும் என்பதை இந்தியா காட்டி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

4 கோடி ஆண்டுகள் பழமையான அரிய புதைபடிவங்கள் கலிஃபோர்னியாவில் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சுமார் 4 கோடி (40 மில்லியன்) ஆண்டுகள் பழமையான அரிய வகை புதைபடிவங்கள் (Fossils) கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் தயார்: அமெரிக்காவுக்கு அப்பாஸ் அராக்சி புதிய முன்மொழிவு!

ஹார்முஸ் நீரிணையை ஒரு வாரத்திற்குள் மீண்டும் திறக்க வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவிடம் முன்மொழிந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இம்ரான் கான் கட்சியின் பேரணி அக்டோபர் 4-க்கு ஒத்திவைப்பு!

பாகிஸ்தானின் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, இஸ்லாமாபாத் நோக்கிய தனது கண்டனப் பேரணியை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

26 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்காவுடனான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு!

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வந்த வர்த்தக மற்றும் தூதரக மோதல்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

25 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm