சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

"ஆரம்ப இலக்குகளில் இருந்து விலகிவிட்டது": ஐ.நா தலைமையகத்திலேயே வைத்து ஐ.நா-வைக் கடுமையாகச் சாடிய அர்ஜென்டினா அதிபர்!

VIGNESWARAN ABIRAMY•24 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
"ஆரம்ப இலக்குகளில் இருந்து விலகிவிட்டது": ஐ.நா தலைமையகத்திலேயே வைத்து ஐ.நா-வைக் கடுமையாகச் சாடிய அர்ஜென்டினா அதிபர்!

"ஆரம்ப இலக்குகளில் இருந்து விலகிவிட்டது": ஐ.நா தலைமையகத்திலேயே வைத்து ஐ.நா-வைக் கடுமையாகச் சாடிய அர்ஜென்டினா அதிபர்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அர்ஜென்டினா அதிபர் ஹேவியர் மிலே, "ஐக்கிய நாடுகள் சபை ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உலகத் தலைமைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அர்ஜென்டினா அதிபர் ஹேவியர் மிலே, "ஐக்கிய நாடுகள் சபை ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உலகத் தலைமைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற 79-வது பொதுச்சபைக் கூட்டத்தில் முதன்முறையாகப் பங்கேற்று உரையாற்றிய அதிபர் ஹேவியர் மிலே, ஐ.நா சபை தனது தொடக்கக் கால இலக்குகளில் இருந்து முற்றிலுமாக விலகிச் சென்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்

"உலக அமைதியைப் பேணவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, இன்று நாடுகளின் இறையாண்மையையும் தனிநபர் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் ஒரு மாபெரும் உலகளாவிய அதிகார மையமாக மாறிவிட்டது. உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்த அமைப்பு முற்றிலுமாகத் தோல்வியடைந்து, ஒரு பயனற்ற பொறிமுறையாக உருவெடுத்துள்ளது."

ஐ.நா-வின் "2030 நிலையான வளர்ச்சி இலக்குகள்" திட்டத்தைக் கடுமையாகச் சாடிய அவர், இது சோசலிசக் கருத்துக்களைத் திணிக்கும் ஒரு வடிவம் என்றும், அர்ஜென்டினா இனி இந்தத் திட்டங்களுக்குக்ட்டுப்படாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சர்வதேச மோதல்களைக் கையாள்வதில் ஐ.நா சபை இரட்டை நிலையைப் பின்பற்றுவதாகவும் அவர் சாடினார்.

மேலும் வலதுசாரி மற்றும் தீவிர தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட அர்ஜென்டினா அதிபர் ஹேவியர் மிலேயின் இந்த அதிரடி பேச்சு, சர்வதேச அரசியல் அரங்கிலும் ஐ.நா பொதுச்சபையிலும் பெரும் விவாதத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm