கழுத்து கருமையை மறைக்க கிரீம்கள் தேடுகிறீர்களா? ஒரே வாரத்தில் மாற்றம் தரும் இந்த வீட்டு வைத்தியத்தைப் பாருங்கள்!

கழுத்து கருமையை மறைக்க கிரீம்கள் தேடுகிறீர்களா? ஒரே வாரத்தில் மாற்றம் தரும் இந்த வீட்டு வைத்தியத்தைப் பாருங்கள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலரையும் பெரிதும் அச்சுறுத்தும் ஒரு பொதுவான அழகுப் பிரச்சனை கழுத்துப் பகுதியில் ஏற்படும் அடர்ந்த கருமை. எவ்வளவு சோப்பு போட்டுத் தேய்த்தாலும், கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தினாலும் இந்தக் கருமை மாறுவதில்லை எனப் பலரும் புலம்புவது உண்டு.
உடலின் உட்புற ஆரோக்கியக் கோளாறுகளுக்கு (இன்சுலின் எதிர்ப்பு, தைராய்டு) மருத்துவர் ஆலோசனையுடன் சிகிச்சை பெறுவது அவசியம் என்றாலும், வெளிப்புறத்தில் படிந்துள்ள அடர் கருமை மற்றும் மந்தமான தோலை வீடிலிருந்தபடியே இயற்கையான முறையில் எவ்வாறு எளிதாக அகற்றுவது.
1.தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 ஸ்பூன், தக்காளி சாறு - 1 ஸ்பூன், சிறிதளவு தயிர்.
செய்முறை
மூன்றையும் நன்றாகக் கலந்து, கருமை உள்ள கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.
5 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு, வட்ட வடிவில் மென்மையாக 2 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் இதைச் செய்து வர இறந்த செல்கள் அகலும்.
இயற்கையிலேயே தோலுக்கு நிறத்தைத் தரும் வைட்டமின் சி மற்றும் லேக்டிக் அமிலம் நிறைந்த பொருட்களின் கூட்டுக்கலவை கருமையை வேகமாக மறையச் செய்யும்.
2.தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு - சில துளிகள், உருளைக்கிழங்கு சாறு - 1 ஸ்பூன்.
செய்முறை
இவைகளை ஒன்றாகக் கலந்து கெட்டியான பேஸ்ட் போலச் செய்து கொள்ளவும்.
கழுத்து முழுவதிலும் சமமாகப் பூசி, 15 முதல் 20 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் லேசாக நீர் தெளித்து மசாஜ் செய்து கழுவி விட வேண்டும். வாரத்திற்கு 3 முறை இதைத் தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.
பெரும்பாலோர் செய்யும் தவறு, கழுத்தைக் கழுவிய பின் அப்படியே விட்டுவிடுவது தான். வறட்சி அதிகமானால் கருமை மேலும் அதிகரிக்கும்.
தினமும் இரவில் தூங்குவதற்கு முன் சுத்தமான கற்றாழை ஜெல்லைக் கழுத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், தோல் மென்மையாவதுடன் நிறமும் சீராகும்.
பகல் நேரத்தில் வெளியே செல்லும்போது முகத்திற்குப் போடுவது போலக் கழுத்துப் பகுதிக்கும் சன்ஸ்கிரீன் தடவுவது வெயிலால் கருமை அதிகரிப்பதைத் தடுக்கும்.
சர்க்கரை, மைதா மற்றும் நொறுக்குத் தீனிகளைக் குறைத்து, தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலின் நச்சுக்களை வெளியேற்றித் தோலுக்குப் பொலிவைத் தரும்.
இயற்கை வைத்தியங்களை 2 முதல் 3 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தும் எந்த மாற்றமும் இல்லை என்றால், உடனே ரத்த சர்க்கரை அளவு மற்றும் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது புத்திசாலித்தனம்.
இயற்கை அளித்த எளிய பொருட்களைக் கொண்டு சரியான முறையில் பராமரித்து வந்தால், பிடிவாதமான கழுத்து கருமை மறைந்து தோல் மீண்டும் இயற்கை பொலிவைப் பெறுவது உறுதி!

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
கொழுப்பைக் குறைக்கும் மூங்கில் தளிர்... ஆனால் இப்படித்தான் சாப்பிட வேண்டும்!
பாரம்பரிய உணவுகளில் ஒன்றான மூங்கில் தளிர்களை உணவாகச் உட்கொள்ளலாமா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ள நிலையில், முறைப்படி சமைத்துச் சாப்பிட்டால் அதில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளதாக உணவு மற்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமையல் குறிப்பு: 10 நிமிடத்தில் வீட்டிலேயே பஞ்சு போன்ற பன்னீர் செய்யலாம்!
சத்தான உணவாகக் கருதப்படும் பன்னீரை இனி கடைகளில் வாங்கத் தேவையில்லை. வீட்டிலேயே வெறும் 10 நிமிடங்களில் மிக மென்மையாகவும் சுத்தமாகவும் தயாரிக்கும் முறையைச் சமையல் வல்லுநர்கள் பகிர்ந்துள்ளனர்.
மாத்திரை வேண்டாம்... தலைவலியை விரட்ட ஆய்வுகள் கூறும் 10 எளிய வழிகள்!
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் வயது வித்தியாசமின்றி பலரையும் வதைக்கும் ஒரு பொதுவான பிரச்சினை தலைவலி. வேலைப் பளு, மனஅழுத்தம், தவறான வாழ்வியல் பழக்கவழக்கங்கள் எனப் பல்வேறு காரணங்களால் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. ஆனால், எல்லா தலைவலிக்கும் வலி நிவாரணி மாத்திரைகளைச் சார்ந்திருப்பது உடலுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
டயட்டின் போது நொறுக்குத்தீனி ஆசை அதிகரிப்பது ஏன்? கட்டுப்படுத்த எளிய வழிகள்!
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டயட் இருக்கத் தொடங்குபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால், நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்ற அலாதி ஆசை தான். வழக்கமான நேரங்களை விட, டயட்டில் இருக்கும் போது தான் பிஸ்கட், சிப்ஸ், ஸ்வீட்ஸ் போன்ற தின்பண்டங்கள் மீது கவனம் அதிகம் செல்லும்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




